சந்தம் சிந்தும் கவிதை

திருமதி .அபிராமி கவிதாசன்.

09.08.2022

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -185
தலைப்பு !

“சக்தியவர் சக்தி”
விட்டுச்சென்ற பணியோடு
வினையாவும் வென்றார்
தொட்டதனை தொடராக்கி
தோற்றுவித்தார் சக்தியாலே//

எட்டுதிக்கும் புகழ்பாடி
எடுத்தியம்பும் திறனோடு
திட்டமேதும் தீட்டிடாது
திறமையாக தோற்றுவித்தார்//

காட்டினிலே கண்ணைக்கட்டி
விட்டதைப்போல் விழித்திடாது
அட்டகாசம் அருமையாக
அழகுதமிழில் அணிவகுத்தார்//

பட்டதெல்லாம் மனத்தினிலே
படைத்திட்டோம் கவியாலே
மொட்டதனை மலராக்கி
முகர்ந்திடச் செய்தாரே //

வாட்டமிலா பூவுடன்நாரும்
விஜிதாசோதரியும் சேர்ந்தார்
மட்டற்ற மகிழ்வினிலே
மதிபோற்றும் வண்ணம்//

தோட்டத்து மலர்களுடன்
தோன்றியே கவிஞர்கள்
பாட்டிசைத்து பண்புடனே
பக்குவமாய் நின்றார் //

நன்றி வணக்கம் 🙏