கவிஇலக்கம்- 177.
தவித்தலைப்பு ! 04.08.2022
“தேடும் எம்உறவுகளின் தணியாத ஏக்கங்கள் “
தேடும் உறவுகளின் தணியாத ஏக்கங்கள்
நாடும் வரையிலும் நாள்தோறும் போராட்டமே
விடியலைத் தேடும் விடியாத இரவுக்குள்
முடியாத போராட்டத்தில் மூழ்கிய உறவுகளே
பிணக் கைதிகளாய் பிரிந்தோம் சொந்தங்களை
கணத்த மனத்துடன் கவலையை சுமந்தபடி
தாயக உறவுகள் தனித்தனியே பிரிந்தன
தூய இதயங்கள் துன்பத்தில் மடிந்தன
தாக்கத்தின் ஏக்கங்கள் தணியாத நோயாயின
ஆக்கங்கள் அத்துணையும் அழியாத வடுவாயின
நமக்கென ஒருதீவு நாளை மலருமோஎன
எமது உறவுகள் எண்ணி ஏங்குதே
ஆண்டுகள் முப்பதின்மேல் அலைந்து திரிந்தும்
வேண்டுதல் இன்றுவரை விடியல் தரவில்லை
இந்திய தேசத்திலும் ஈழத்து மண்ணிலும்
சொந்தங்கள் பிரிந்து சோகத்தில் வாழ்வு
அங்கும் இங்குமாய் அல்லல்பட்ட வாழ்க்கை
மங்கிய ஒளியுடனே மண்ணிலே வீசுதே
பிறப்பிலும் வளர்ப்பிலும் பின்நாள் இறப்பிலும்
அறமுடன் போராட்டம் அன்னிய தேசத்திலும்
ஒருகூட்டு பறவைகள் ஒவ்வொரு தேசத்திலும்
இருப்பிடம் கொண்டதால் இதயங்கள் நொந்தன
நன்றி.🙏
கவிப்பார்வைக்கு மிக்க நன்றி சகோதரிகளே..மற்றும்
அதிபர் சகோதரி கலைவாணி மோகன் அவர்களுக்கும்
பாராட்டுகள் 🙏