வியாழன் கவிதை

தடமது படைத்தெழும் தனித்துவம், (கவி இலக்கம் 31), 06-06-2024

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

தடமது படைத்தெழும் தனித்துவம்

ஐரோப்பாவின் லண்டன் வானோலி
அகிலமெங்கும் அலையாய் வீச
27ம் அகவை இனிதே ஒளிர
இதயங் கனிந்த வாழ்த்துகள் கூறி

தலைசிறந்த தலைமைத்துவமும்
தடமது படைத்தெழும் தனித்துவமும்
இடமது தேடித்தமிழ் பரவும் மகத்துவமும்
இனிதே கண்டேன் முக்கியத்துவமும்

எழுத்தார்வம், கலைத்துவம், கவித்துவம்
பல ஆர்வத்தோடு சிறியவர், பெரியவர்
பயிற்சியும் இணைந்தே தொடருது…
மேலும் படருது பொது அறிவுகளும்.

எட்டுத் திக்கும் சிறந்து விளங்கி
எண்ணற்ற அறிவொளி துலங்கி
விண்வரைப் பாயும் வானோலியே
மேலும் சிறந்து ஒளிர, இருகரம் கூப்பி நன்றிகளே …

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.