வியாழன் கவி : தமிழ் மரபு திங்கள்
தரணி எங்கும் தமிழர்களாம்
தனிப்பெரும் மரபு உலகினில்
பதிகிறது
மரபு திங்கள் மாதம் இது
உலக சாசன பதிவினிலே
பதியம் காண்பதே எண்ணமது
தமிழ் மரபின் அடையாளம் நம்
அடுத்த தலைமுறை நோக்கியதே,
ஆரம்ப உயிப்பு நம் இல்லங்களில்
வலம் பெற வேண்டும் தாய்
தமிழ் மொழியால்
மரபு திங்கள் ஆளுமையில்
தைப்பொங்கல் திருநாள் முதன்மை ஆகுறதே!!!