வியாழன் கவிதை

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : வளர்ந்த குழந்தைகள் தாமே
27/04/2023

கள்ளமில்லா உள்ளம் கொண்ட
வள்ளல் ஆனவர்
மாசுபடா உறவு தனை
வாரி கொடுப்பவர்

நாளை வரும் பொழுதுகளை
மறந்து என்றுமே
புத்தம் புது மலர்களை போல்
பொலிவு கொண்டவர்

அடம் பிடிக்கும் ஆற்றலோடு
பிறர் மனதில் வாழ்பவர்
என்றும் இவர் இறை ஈர்ந்த
வளர்ந்த குழந்தைகள்
நம் கைகளிலே தாங்கி
கொள்ள வலிமை வேண்டுவோம்
அவர் வலிமை வேண்டுவோம்!!!