வியாழன் கவி : நலம் பெற வேண்டுதல்
தமிழ் மொழி பரப்பின்
கோமக சிகரம்
கவிக்கோ எங்கள்
பாமுக அரசவை கவிஞன்
உடல் நல தளர்வென
ஒரு நொடி செய்தி
உள்ளத்தில் ஓங்கி அறைந்தது போல் வலி ஆச்சுது
கவிமழை தெறிப்பு
கம்பீர குரல் வளம்
காலத்தால் அழியாத
பல நூறு பாடலின் தொகுப்பு
மார்க்கண்டேய கவி மகன் கவிக்கோ
உடல் நலம் சீர்பெற்று
சிறப்புடன் உறவோடு உறவாட காத்திருப்புடன் வேண்டுதல் வேண்டி பிரார்த்தனை செய்யும்
பேரன்பு கொண்ட
ரசிகனில் இவனும் ஒருவன்
நன்றி