வியாழன் கவிதை

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : புழுதி வாரி எழும் மண் வாசம்

புழுதி வாரி எழும் மண் வாசம்
அந்த மண் வாசம்
சோறு தண்ணி மறந்து
மண்ணில் அங்கமெல்லாம்
பிறந்தட்டை கடன் செய்த பொற்காலம்

ஆடு மாடு மேச்சல் மாட்டு வண்டி சவாரி கிளித்தட்டு மறியல் இங்கெல்லாம்
புழுதி வாரி எழும்
மண் வாசம் மண் வாசம்

உச்சம் தலை குளிர
சனிக்கிழமை தோறும்
நல்லெண்ணை குளியல்
புழுதி வாரி எழும் மண் வாசம்
கலைத்தும் மீண்டுமாய்
புழுதி மண்ணில் நகர்வோம்!!