கவி : உரு மாறும் புதிய கோலங்கள்
அலை பாயும் மனதில்
அகப்பையில் அடங்காத எண்ணம்
உரு மாறும் புதிய கோலங்கள்
உள்ளமதை உலையாக கொதிக்க வைக்கும்
உருமாறும் புதிய கோலங்கள் பிறவா விடின்
படைப்புக்கள் படையல் காணாது
அடுத்த தலைமுறை பதிவிக்காய்
புதிய கோலங்கள் படைப்பதே
நம் பிறவிக்கு பயன்!!