சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-19.09.2023
இலக்கம்-232
தலைப்பு
—————
ஒவ்வொரு செவ்வாயும்
கவிதை தலைப்பு கவிஞரின் சிறப்பு
எழுதித் தள்ளுவதில் கவிஞர்கள் ஆர்வம் கொள்வதில் வியப்பு
மடல் எழுதுவதில் தலைப்பில் கடவுள் சுழியில் சிறப்பு
நல்லதாக பலன் பெறுவது இறைவனின்
அருள் நிறைவு
பெண்களின் ஒய்யார சேலைத் தாவணியின் தலைப்பு
கொய்து கட்டி போகும்போது பார்க்க வியப்பு
பாமுகத்தில் கவி இலக்கியம் பெரும் தலைப்பு
அதில் கருவோடு எழுதி வாசிப்பதில் பெரும் உழைப்பு
தலைப்பு சம் கால நிகழ்வுத் தலைப்பு என பெரும் மதிப்பு
அதில் நான் அடையும் பெருமையோ பெரும் இனிப்பு
நான் பாராட்டுக்கள் பெற்றுக் கொண்டது வாழ்வில் பெரும் உயர்வு
ஜெயா நடேசன்
ஜேர்மனி