சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.05.2023
கவி இலக்கம்-224
மூண்ட தீ
———————-
ஒரு குச்சி தீ மூண்டதே
பற்றி எரிந்து அழித்ததே
தமிழர்கள் அறிவுப் புதையல் யாழ் நூலகமே
காற்றாலே உன்னை அணைக்கலாமே
நீ காற்றாலே சுடர் விட்டும் எரிவாயே
உன் தலையில் தீ மூட்டினால்
நிமிர்ந்து நின்று ஒளிர்வாயே
தீ சுடும் என்று அம்மா சொல்லி தந்தாள்
தீ சுடுமா என தொட்டுப் பார்க்க நினைத்தேனே
காட்டுத் தீ மூண்டதாலே
மரங்கள் விலங்குகள்
அளிக்க வைப்பாயே
தீ மூட்டி உணவு சமைப்போம்
தீ கூடி விட்டால் சட்டியும் கறியும் எரிந்திடுமே
இறுதி நேரத்தில் தீ மூட்டி பந்தம் கொழுத்துவோம்
ஒரு
மூண்ட தீயில் உடலும் சாம்பலாகுமே
ஜெயா நடேசன் ஜேர்மனி