சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-02.05.2023
கவி இலக்கம்-222
நடிப்பு
—————-
நாடக மேடையில் ஆணும் பெண்ணும் பெரும் நடிப்பு
மனக் கிடக்கையில் சிலர் கள்ள நடிப்பு
மனித இதயம் ஓயாது துடிப்பு
மக்களோ உழைக்காது சோம்பலில் வேஷ நடிப்பு
காலை மாலை மாணவர்கள் அயராது படிப்பு
அரசாங்கமோ வேலை தருவதாக நடிப்பு
ஆண்களோ இரகசியமாக மதுபானம் இரகசிய குடிப்பு
பெண்களை ஏமாற்றி வாழும் கணவன்மார் பெரும் நடிப்பு
மாப்பிளை பெண்களுக்கு மஞ்சள் கயிறு முடிப்பு
பெண்களை ஏமாற்றி அருகில் உறவுடன் நடிப்பு
மாணவர்கள் ஆசிரியர் பெற்றோர் மதிப்பு
போதை வஸ்துகளில் ஏமாற்றி வாழும் நடிப்பு
அரிசியை மாவாக்க ஆலையில் திரிப்பு
வீட்டில் அரிதட்டால் அரித்து கலப்படம் செய்து விற்பனை நடிப்பு
பொய்யான சான்றுகள் பணம் கொடுத்து மதிப்பு
மேடையில் புழுகலில் சொற்கள் எடுப்பில் நடிப்பு
எப்படியும் கவிதை எழுத வேண்டுமென துடிப்பு
பொய்யான் கவிதையில் பெரும் நடிப்பு
ஜெயா நடேசன் ஜேர்மனி