சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-21.11.2023
கவி இலக்கம்-243
பிறந்த மனை
—————
பசுந்தீவு எனும் பெரும் தீவிலே
மாவிலி துறை வீதியிலே
கற்களால் வேலி அமைந்த நடுவினிலே
கெம்பீரத் தோற்றத்துடன் பிறந்த மனை
குடும்பம் ஒரு கோயில் மாதிரி சகலதும் நிறைந்த மனை
வந்தாரை வரவேற்று இளைப்பாறிச் செல்லும்
எம் மனை
விசாலமான வீடு மருந்து அறை அம்மா அறை
நோயாளர் தங்கி நின்று நோய் தீர நீளமான அறை
கும்மாளம் கொட்டி குதூகலித்து சந்தோசம் கொண்டாடும் மனை
மாலை என்றதும் கூடியிருந்து குடும்பமாக செபிக்கும் மனை
ஊரிலே இரண்டாவது பெரிய மனை
அத்தனை பேரும் வாழ்ந்து கல்வி உணவு உடை தாராளமாக தந்த மனை
எல்லா செல்வமும் நிறைந்து கிடந்த பொக்கிச மனை
நல்ல காரியங்கள நிறைவாக கடவுள் அருளால் கிடைத்த மண்டப மனை
இன்று அது மீண்டும் உயிர் பெற்று கெம்பீரமாக தோன்றும் காட்சி மனதிற்கு மகிழ்ச்சியை தருகின்றது்
அம்மனை என்றும் உள்ளங்களிலும் உயர்வாக உள்ளது
ஜெயா நடேசன் ஜேர்மனி