சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-241
தீப ஒளியே
———————
அகிலத்தில் ஒளி தர பிறக்கும் தீப ஒளியே
ஆதவன் உதிப்பில் கதிராக ஒளியே
இருளை அகற்றிடும் விளக்கு ஒளியே
ஈசல் தேடி மடியும் லாம்பு ஒளியே
உலகத்தை அளித்திடும் மின்னல் ஒளியே
ஊற வைத்து கறி சமைக்க பழப் புளியே
எண்ணிலடங்கா தமிழர்களின் தீப ஒளியே
ஏற்றத்தை உண்டு பண்ணும் கல்வி ஒளியே
ஐயத்தை உண்டு பண்ணும் சந்தேகப் பேரொளியே
ஒவ்வாமை உண்டு பண்ணும் உடம்பில் மாற்றொளியே
ஒயாது உழைத்து உயர வைக்கும் வளியே
ஒளவை அம்மையாரின் அமுத வாய்மொழியே
அகேனம் எனும் ஆயுத எழுத்தால் ஒளிரட்டும் தீப ஒளியே
ஜெயா நடேசன் யாழ்