சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-17.10.2023
இலக்கம்-238
மீண்டு எழு
——————
தாயகம் எங்கும் வீழ்ந்து கிடக்குது
போதை வஸ்து இளையோரை
ஆட்டி படைக்குது
மக்களே விழிப்பாயிருங்கள் மீண்டெழுந்து வாருங்கள்
களவு கொலை அட்டூழியங்கள் வீட்டு க்கு வீடு மலிந்து விட்டது
இளையோரே தூங்காதீர்கள்
மீண்டெழுந்து வாருங்கள்
தமிழ் நிலங்களெல்லாம்
அன்னியர் பறி முதல் செய்கிறார்களே
தமிழ் உறுப்பினர்களே மெளனித்து வாழ்கிறீர்களே
ஒற்றுமையுடன் செயல்பட்டு எழுந்து வாருங்கள்
நீதி நியாத்துடன் வாழ்ந்து வரும் உழைப்பாளிகளே
பொருளாதாரம் பிரச்சினையில் முடங்கிய உறவுகளை
எட்டி பார்த்து எழுந்து கரம் கொடுங்கள்
உழைப்பின்றி சோம்பேறிகளாய் வாழும் உறவுகளே
புலம்பெயர் மக்களை நம்பியிராது
கைத்தொழில் முயற்சியில் ஈடு பட்டு
சோம்பலை நீக்கி
மீண்டும் எழுந்து பாருங்கள்
வெற்றி உங்கள் கைக்கே
எழுவாய் பலதாய் பாரினில் எழுவாய்
மீண்டும் உயர்வாய்
Jeya Nadesan Germany