சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-03.10.2023
கவி இலக்கம்-236
குழலோசை
———————
மாயக் கண்ணன் கையில் குழலோசை
காதில் வந்து முழங்குது தேன் ஓசை
மூங்கில் மரத்து கிளை துண்டு வெட்டோசை
துளைகள் ஒன்பதில் பரவலான ஓசை
நாதஸ்வர வித்துவானின் நல் காரியங்கள் ஓசை
நாலு பேர் கேட்க மயங்கிய ஓசை
கானகத்து பறவைகளின் கீச்சிடும் மயிலின் ஆட்டமும் தனி ஓசை
தென்னங் கீற்றின் உரைசல் சத்த ஓசை
தென்றல் காற்றின் கடலும் காதல் ஓசை
பெண்களின் சதங்கை ஒலி துள்ளல் ஓசை
வளையல் கிலு கிலுப்பில் காதலின் அடி ஓசை
பாட்டும் பதமும் கலந்த பண்ணிசை ஓசை
காதில் விழுந்து பலதாக ஓசைகள் ஒலிக்கின்றனவே
ஜெயா நடேசன்