வியாழன் கவிதை நேரம்
21.09.2023
கவி இலக்கம்-1754
தியாகமே தீர்ப்பானது
————//————
மாவீர விடுதலை தியாகிகளின்
அன்புப் பயணம் அநியாய தீர்ப்பானது
விடுதலைக்காக போராடும்
பல்லாயிரக் கணக்கான
மக்களின்
உயிர்த் தியாகமே தீர்ப்பானது
தியாகத்தில் சிறைச்சாலை கொலையாளி
நீதி மன்றத்தில் தீர்ப்பானது
பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள்
பாலியல் ரீதியாக படுகுழியில் தள்ளும்
பாதகர்களின் நீதி தவறிப்போனது
உண்ணா விரதம் இருந்து
உயிர் நீத்த தியாகி திலீபனின் தியாகமே
விடுதலை வேள்வியில்
ஆகுதியானது
உலகுக்கு உழைக்கின்ற மக்களின்
பொருளாதாரம்
வாழ்க்கை தியாகமே தீர்ப்பானது
ஜெயா நடேசன்