சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன் “தவிப்பு”

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.04.2023
இலக்கம்-217
தவிப்பு
—————
எனக்குள் விடை காணாதொரு தவிப்பு
இடம் விட்டு இடம் மாறுவது
மனதிற்கு ஒரு வெறுப்பு
பலகாலம் வாழ்ந்து அயலவர் உறவில் பிரிந்து போவது கனப்பு
பயணங்கள் தொடர்வது
மனதிற்கு விருப்பு
பிள்ளைகள் உதவி நிறைய கிடைப்பது மிக விருப்பு
ஆயுள்வரை எனது வாழ்வு பெரும் சிறப்பு
அமைதியான வாழ்வில் பெரும் உழைப்பு
அன்பான பிள்ளைகள் இணைவிலே அழைப்பு
ஆறுதல் வாழ்வில் எனது
முன்னேற்ற முனைப்பு
மனதிற்கு பெரும் நிறைவான செழிப்பு
இறைவனின் செயலால் மனதிற்கு வாழ்வு நிறைவான மகிழ்வு
ஜெயா நடேசன்
ஜேர்மனி