சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.04.2023
இலக்கம்-218
சுடர்
——————
உலகிற்கு சூரிய ஒளிச்சுடர்
உயினங்களுக்கு நிறை பேரொளியே
சுட்டும் விழிச் சுடர்
கண்ணம்மா பாரதியின் கவிதையே
தியாகச் சுடர் திலீபன் இறப்பு
தமிழினத்தின் அழியாத முத்திரை பதித்ததே
தீபச் சுடர் கியூறி அம்மையார்
மருத்துவம் மாண்பு பெற்றதே
ஈகைச் சுடர் மாவீ்ர மணிகளின்
கார்த்திகை நினைவாகிறதே
அணையாச் சுடராய் பெற்றோர்கள்
எம் நல் வாழ்விற்கு பேரொளியானதே
ஜெயா நடேசன் ஜேர்மனி