சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம்

ச.சி. ச

மீண்டு எழு

கலங்கி நிற்பதால் உண்டோ நன்மை
விளங்கிக் கொண்டால் புரியும் உண்மை
வழிகள் இங்கு ஆயிரம் உண்டு
பழியை போடாது முனவைது நன்று

உடநை்த மேகங்களாலே தான் மழை
அடைந்து கிடந்துவிட்டால் மாறுமோ நிலை
இழந்தவைகள் எல்லாமே முக்கியம் தான்
புலம்பிக்கொண்டே இருந்துவிடின் வாழ்க்கையே வீண்

கூட்டின் பூட்டை உடைத்து வெளியேறு
ஆட்டம் ஆட தளங்களிருக்கு நூறு
அழுதே கிடப்பது இனிமேலும் பாவம்
எழுந்து பயணித்தால் மட்டுமே லாபம்

வீழ்ச்சி என்பதிங்கு நிரந்தரம் அல்ல
வாழ்க்கையில் இப்படி எத்தனையைச் சொல்ல
தயங்காது எதற்கும் துணிவோடு நில்
இயற்கையின் நட்பை துணையாக்கிக் கொள்

ஐெயம்
16/10/2023