வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 644

வியப்பில் விழிகள்

ஒருவிதமான மகிழ்ச்சியான ஆச்சரியம்
பெருமிதமான செயல் ஆனந்த பூச்சொரியும்
உருவத்தில் சிறியவளின் ஆயிரம் பிரசவிப்பு
அரும்பு அவளின் ஆக்கங்களின் அணிவகுப்பு

வியப்பால் விழிகள் அகல விரிகின்றன
உயர்வாள் இமயமென படைப்பினூடு தெரிகின்றது
பயத்தை தூக்கியெறிந்த நேர்மறை உணர்வுகள்
சுயம் வெளிப்பட்டது படையெடுத்தன திறமைகள்

இளையவளின் அடுக்கடுக்கான விடா முயற்சிகள்
களைக்கவில்லை ஆயிரத்தை எட்டிய உயற்சிகள்
மலைபோல நம்பிக்கை அரும்பினால் உருவானது
நிலைக்கும் மொழியெனவே பரதேசத்திலும் முடிவானது

உரையாடலென்ன எழுதுவதென்ன சீதனமானது தாய்மொழி
திரைநீக்கி வெளிவந்து அமைத்தாள் தனிவழி
கரைதாண்டியே போனது மகளின் அறிவலைகள்
தரைமேலே இன்னுமொரு சின்னக் கலைமகள்

நாற்றிசையும் புகழதுவும் எட்டியே பரவட்டும்
ஆற்றிவிட மொழிப்பணியை வல்லமையும் எட்டட்டும்
போற்றிவிடுமளவிற்கு வானமே அண்ணார்ந்து பார்க்கட்டும்
ஏற்றுக்கொண்டே சிறுவுலகம் மகிழ்வுதனை சேர்க்கட்டும்

ஜெயம்
15-03-2023