சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

https://linksharing.samsungcloud.com/zOCXxYMWgSGu
எம் நாடு

இந்து மாகடலில் மிதக்கின்ற முத்து
அத்துணை இயற்கை வளங்களின் சொத்து
சிந்தும் நீர்வீழ்ச்சி பாடிவிடும் சிந்து
அந்த நதியூரும் அழகை உற்பவித்து

என்னவொரு உலகைப் படைத்தவரின் கைவண்ணம்
எண்ணமெல்லாம் தாயகத்தின் நினைவுச் சின்னம்
அன்றங்கு வாழ்ந்த வாழ்க்கை இன்னும்
மின்னிமறையும் ஞாபகங்கள் போய்விடவே எண்ணும்

கண்களைப் பறிக்கும் கடலின் நீலம்
பொன்னிற மணலோ கரையோரம் நீளும்
விண்ணை முட்டும் மலைகளின் கோலம்
என் மண் வனப்புகளை ஆளும்

சகோதரராக கூடியே வாழ்ந்தவொரு நாடு
அகோர யுத்தத்தினூடே இன்று சுடுகாடு
மகோன்னதத்தை மங்கவே வைத்தது அடிபாடு
கைகூடி வராது இழுபறியாக உடன்பாடு

ஜெயம்
10-03-2023