சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

சாதனை

காட்டுக்குள்ளே வாழ்ந்தான் மனிதன் ஆதியில்
வேட்டையாடி உண்டு உறங்கி சீவித்தான்
நாட்டை உருவாக்கினான் அவனே மீதியில்
கோட்டையாக்கி பூமியை செய்கின்றான் ஆட்சியின்று

பரதேசியென காட்டுக்குள் அலைந்து  திரிந்தவன் 
மரங்களிற்க்கடியில் விலங்குகள் நடுவில் உறங்கியவன்
குரங்கிலிருந்து பிறந்தவன் கூன் நிமிர்ந்தான்
விரல் நுனியால் இயக்குகின்றான் உலகையின்று

நாளுக்கு நாள் புத்தியை வளர்த்தான்
கோளும் ஒன்பதென அவனே  அறிவித்தான்
வாழும் முறையிலும் நாகரீகத்தை நுழைத்தான்
ஆளுமை கொண்டே பூமியில் வலம் வருகின்றான்

முடங்கிக் கிடக்காது அடுக்கடுக்காய் முயற்சித்தான்
நடந்து திரிந்தவன் வானத்தில் பறக்கின்றான்
கடக்கும் காலங்களுள் விந்தைகளைச் செய்து
அடங்காத அறிவினால் சாதனையாய்ப் படைக்கின்றான்

ஜெயம்
21-02-2023
https://linksharing.samsungcloud.com/thZeYVEWWgyz