பட்டினி
பசித்தவர் தரணியில் நிறைந்து கிடக்க
புசிப்பவர் மனமில்லை பகிர்ந்து கொடுக்க
கசியாதுளம் இருப்போர்கெலாம் கைகள் முடங்க
வசிக்கவே இயலாதவர் நிலவுலகம் அடங்க
உணவின்றி பரிதவிப்போருலகில் சரிபாதிப் பேர்
பணங்காசை அனுபவிப்போர் மறுமீதி பார்
கணக்கிங்கே பிழைக்கின்றதே போட்டவர்தான் யார்
பிணக்கோடு இருவேறுலகம்
எளியோருலகில் ஒழியாப்போர்
சுருங்கிய வயிற்றில் வறுமைக் கோடுகள்
ஒருவேளை சோற்றுக்கே சிலுவைப் பாடுகள்
இருப்பவரெல்லாம் திண்டிரைமீட்க கொண்டாடும் வீடுகள்
வறுமையும் பட்டினியுமிங்கே பெரும் சாபக்கேடுகள்
ஜெயம்
01-04-2022