சசிச
தைமகளே வா
துன்பத்தை துயரத்தை துடைத்ததை
வலியதை விழிநீரதை மறைத்ததை
பட்டதை கெட்டதை மறந்ததை
வருத்தத்தை விரட்டும் தை வரும் தை
நேசத்தை பாசத்தை சேர்த்ததை
சொந்தத்தை பந்தத்தை உயிர்ப்பித்ததை
வாழ்வதை தேனாயதை சொட்டும் தை
குடும்பத்தை மெய்ப்பித்ததை தரும் தை
வேடத்தை நடிப்பதை விலத்தியதை
பாவத்தை வஞ்சகத்தை தொலைத்ததை
பயணத்தை பாதையதை திருத்தியதை
மாற்றத்தை ஏற்றத்தை படைக்கும் தை
விருப்பத்தை ஆசையதை நிறைவேற்றியதை
ஆனந்தத்தை அதிசயத்தை அரங்கேற்றும் தை
வேண்டியதை வந்ததை கொடுக்கும் தை
தேடியதை தந்ததை அருளும் தை
சந்தோசத்தை சமாதானத்தை அளித்ததை
பஞ்சத்தை நீக்கியதை செழிப்பதை
போரதை ஒழித்ததை சீரதை
பூத்த தை நேயத்தை கனிந்ததை
ஜெயம்
04-01-2023
https://linksharing.samsungcloud.com/xFl0rikdtxUd