சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

மார்கழி

பார் களிக்க வந்தததொரு மாதம்
மார்கழி மாதமது மாதங்களுள் பிரமாதம்
காரிருள்  குவலயத்தை போர்த்துக்கொள்ளும் போதும்
பூரிப்பிலே வந்திடாது கடுகளவும் சேதம்

வருடக் கடைசியில் வழியனுப்ப வந்ததே
கருமை நிறைத்தாலும் அருமையினைத் தந்ததே
பருவநிலை தானடைய வெண்பனியும் பூத்ததே
சிறுவர்களின் உள்ளங்களில் தேன்துளியைச் சேர்த்ததே

இருபத்தைந்தில் கொண்டாடவே இயேசுபாலன் பிறப்பு
உருகிவிடும் பனிநடுவில் நிகழுமந்த சிறப்பு
பெருமைமிகு திருநாளைக் கொண்டதான இருப்பு
அருமையான மாதமென மார்கழிக்கான குறிப்பு

இரும்பும் நடுங்கிவிடும் குளிர்காற்றும் வீசும்
சுருங்கிக்கொண்ட சூரியனால் சீதளம் கதைபேசும்
இருந்தாலும் ஆண்டினிறுதியில் உறுதியின் மாசம்
தருகின்ற நன்மைகளால் பொங்கிவிடும் மனத்தேசம்

ஜெயம்
04-12-2022
https://linksharing.samsungcloud.com/sMWuTgEViLZH