வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 623

பேசாமல் பேசும் உலக மொழி

மொழிகளிற்கெல்லாம் மூத்த மொழி
மனிதன் பேசிய முதன்மை மொழி
வாயும் பேசாது காதும் கேளாது
இருந்தும் உணர்வைப் பரிமாறா நாளேது

வார்த்தைகள் இல்லாத மௌனமொழி
விரல்கள் உற்பத்தியாக்கும் சைகை மொழி
வாய்ப்பேச்சில் இல்லா அற்புதம் இதற்குண்டு
உலகளவில் கொண்டாடப்படவேண்டிய மொழியொன்று

இறைவன் கொடுத்த உன்னதமான வரம்
திறமையாய் கற்று உயர்ந்தார் வாழ்க்கைத்தரம்
வார்த்தைகளால் வடிக்கமுடியாத அழியாத காவியங்கள்
பார்த்தாலே பரவசம்தான் விரல்களின் ஓவியங்கள்

மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு உதவிய மொழி
போற்றிடுவோம் புரட்டாதி இருபத்துமூன்றை உணர்வுகள்வழி
இயலவில்லையேயெனும் எண்ணத்தை விரட்டிய மொழி
தயக்கத்தைத் தகர்த்து குரலின்றி விரலால் எண்ணத்தைப் பரிமாறும்மொழி

ஜெயம்
21-09-2022