சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

எண்ணம்

உள்ளத்தில் நினைக்கின்ற எண்ணம்
உள்ளதாய் வாழ்க்கையின் வண்ணம்
மனதை சரியாக பார்த்தபடி
தினமும் ஏறிடு வாழ்க்கைப்படி

எண்ணற்ற அழகிய தத்துவம்
கொண்டதாய் வாழ்க்கைப் புத்தகம்
நேர்மறை எண்ணத்துடனான பயணம்
பாரில் அடைந்துவிடும் பயனும்

அனுதினமும் ஓடிவிடும் ஓடம்
அனுபவத்தைக் கற்பித்தே ஓடும்
நேர்மறையாய் இருந்துவிட்டால் எண்ணம்
யாரெனினும் மகிழ்ச்சியதே திண்ணம்
உயரத்தில் இருக்கையிலே தெரியாது
துயரப்படாது மனிதரை புரியாது
சிந்தை வேண்டுமிங்கு தெளிவாக
தந்துவிடும் நாளை எழிலாக

எண்ணம்தான் வாழ்க்கையைக் கட்டுகின்றது
பண்பட்டால் இன்பத்தைச் சொட்டுகின்றது
வேண்டாத எண்ணங்களை அகற்றிவிடு
வேண்டியதை மனதிற்கு புகட்டிவிடு

ஜெயம்
11/09/2022