இதுதான் வாழ்க்கை
மனிதத்தை மனதினால் பிழிந்து
புனிதத்தை செயலினில் பொழிந்து
வாழ்க்கையை வாழ்ந்திடின் நன்மை
வாழ்த்துவார் இறைவனும் உண்மை
உலகமது ஆண்டவன் வீடு
அழகான மண்தேசம் பாரு
விளைகின்ற நொடியெல்லாம் பொன்னாகுமே
முளைக்கின்ற விதைதாங்கும் மண்ணாகுமே
பாசத்தை தரிக்கின்ற களமல்லவா
நேசத்துள் கரைகின்ற நிலமல்லவா
பந்தமே பாரின் எண்திக்கும்
சொந்தமாய்ப் பாரின் அது சொர்க்கம்
இருப்பதோ கொஞ்சக் காலம்
கரைந்திடும் மண்ணின் கோலம்
இதுவரை எப்படியோ இருக்கட்டும்
புதுநாட்கள் நற்செயலால் சிறக்கட்டும்
ஜெயம்
16/08/2022