சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

சொந்தங்களே சொத்துக்கள்

சொந்தங்கள் நடுவில் வாழ்கின்ற போது
சிந்திடும்  ஆனந்தத்திற்கு எல்லைதான் ஏது
வந்து வாழ்க்கையை அழகாக்கும் தினமும்
தந்து சுகத்தை கரைந்திடும் கணமும்

உள்ளத்து அடியில் பாசமாய்ப் பொங்கிடும்
கள்ளம் இல்லாத நேசமாய்த் தங்கிடும்
கட்டி அணைக்கையில் உயிரும் உருகிடும்
கட்டி இன்பத்தை வாழ்க்கையும் பெருக்கிடும்

உறவுகள் அருகினிலே ஒருகோடி நிம்மதி
வரவாகும் என்பதெல்லாம் தெரிந்ததோர் சங்கதி
தனிமையே போதுமென நெருக்கத்தை தவிர்த்திடலாமா
இனிமையை அனுபவியாது இறுதிவரை தவித்திடலாமா

ஜெயம்
08-08-2022