கவி 616
அது அப்படியல்ல இப்படி
விடிந்து விட்டது விடிந்து விட்டது என்பார்
வெளுப்பதெல்லாம் விடியவில்லை
முடிந்து விட்டது முடிந்துவிட்டது என்பார்
மொத்தமாக முடியவில்லை
கற்றேன் கற்றேன் என்பார்
கடுகளவும் கூட அறியவில்லை
பெற்றேன் பெற்றேன் என்பார்
பிள்ளைகளைத் தவிர பெறவில்லை
அளிக்கின்றேன் அளிக்கின்றேன் என்பார்
தன்னுடையதை அளிக்கவில்லை
ஒழித்திடுவேன் தீமையை என்பார்
பேய்க்குணம் விடவில்லை
தேடிவிட்டேன் தேடிவிட்டேன் என்பார்
தன்னையே இன்னும் தேடவில்லை
சூடிவிட்டேன் மகுடம் என்பார்
கோட்டைக்குள்ளே நுழையவில்லை
ஆறறிவோடு பிறந்த அதிசயப் பிறப்பாக மனிதன்
தடுமாறி நடந்தாலும் ஆடுகின்றேனென கூறுவான்
பசியாறவில்லையெனினும் அமுதம் உண்டெனென்பதில் பெருமை
பூமிவாசிகள் புகழ்பாடும் வில்லுப்பாட்டை கேட்டாலே இனிமை
ஜெயம்
03-08-2022