வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 615

உலகாளும் நட்பே

வாழ்க்கையில் நீ தோற்காமல் இருக்கவேண்டுமா
நல்ல நண்பனைத் தேடு
சோதனைகளால் வரும் வேதனைகளையும் சாதனைகளாக்க
நல்ல நண்பனைத் தேடு
உன்னை உயர்த்தியும் விடும் விழும்போது தாங்கிபிடிக்கும்
நல்ல நண்பனைத் தேடு
அர்த்தமுள்ள வாழ்க்கையை அற்புதமாக வாழவேண்டுமா
நல்ல நாண்பனைத் தேடு

நட்பைக் கொண்டுபார் மன அழுத்தங்கள் உன் வாழ்க்கையில் உள்நுழையாது
மனதைக்கீறி புதையும் அவமான விதைகளால் கவலைச் செடிகளும் விளையாது
கள்ளங்கபடமற்ற ஒரு பரிசுத்த உ றவே தோழமை அதை அனுபவிக்காமல் இறக்காதே
நீ அழும்போது உனக்காகவேண்டி ஒருவன் அழுவான் அவனை உன் வாழ்க்கைக்கு அறிமுகப்படுத்த மறக்காதே

நட்பு என்பது அழியாச் செல்வம் நிலையில்லா வாழ்க்கையின் அந்த நிலைக்கும் சொத்தை சேமித்துவிடு
அதுவொரு விசித்திர உலகம் அதற்குள் சஞ்சரிப்பவன் மண் ஜென்மத்தின் அதிஷ்டசாலியாவான்
வாழ்க்கையை திரும்பிப்பார் நீ நண்பரோடு கழித்த காலங்களிலேயே குதூகலங்கள் கூடுகட்டியிருக்கும்
எச்சரிக்கிறேன் தோழமையை ஏற்காது வெறுமையாக வாழ்பவர்கள்
வாழவே தகுதியற்றவர்கள்

உணர்வை ஆளும் உயிரை ஆளும் உறவை ஆளும் உலகை ஆளும் நட்பு
மிகவும் வித்தியாசமானது உதவியென்றால் உயிரைக்கூடக் கொடுக்கத் தயங்காதது மகத்தானது நட்பு
பிறப்பு முதற்கொண்டு இறப்புவரை சிறப்பைத்தருவது தூய்மை நட்பு
எத்தனையோ உறவுகளிருக்கும் அத்தனை உறவுகளிலும் உன்னதமானது இறை சன்னிதியானது நட்பு

ஜெயம்
26-07-2022