கவி 614
உலகிற்கு நம்மைக் காட்ட செதுக்கியவர்
களிமண்ணையும் தன் கரங்கொண்டு பாண்டமாக்கும் குயவன்
உளியாகி கற்பாறைகளை அழகுச் சிலைகளாக்கும் சிற்பி
சிறுசித்திரங்களையும் அதி விசித்திரமாக்கும் ஓவியன்
அறிவுக் கண்களைத் திறக்கும் திறவுகோல்
மாணவர்கள் வழித்துணையாகி நல்வழி காட்டி
வீண், அவர்கள் ஆகாமல் நல்லறிவுதனை ஊட்டி
எழுத்தை அறியவைப்பார் உற்சாகத்தை ஊட்டி
தொழுதுகொள்வோமே அறிவோவியத்தை இதயத்திலே மாட்டி
கற்றுக்கொடுப்பதில் பெற்றோர்க்கும் மேலாக இருப்பார்
சொற்களைத் தொடுத்து செவிகளுள் விழுத்தி சிந்தை நீங்காது தரிப்பார்
சத்துள்ள போதனையால் அறியாமை ஓட்டைகளை அடைப்பார்
மந்திரம்கொண்ட வார்த்தைகளாலே நல் சமூகத்தைப் படைப்பார்
ஆக்குவதில் இவர் மண்ணுலகப் பிரம்மா
ஊக்குவிக்க இவரைப்போல் யாருமிங்கு வருமா
தேக்கிவிட கல்விதனை மானவர்க்குத் தரமா
தாங்கிக்கொண்டது பூலோகம் ஆசிரியரை வரமா
நான், நானாவென தயங்கிய போதெல்லாம் நம்பிக்கை விதைத்தார்
தேன் ஊறிய மொழிதனைக்கொண்டு என் அச்சத்தைத் தவிர்த்தார்
இன்று நான் முகவரி எழுத அன்றே உற்சாக வரிகளைக் கொடுத்தார்
என்றும் நான் வாழ்த்திடும் வணங்கிடும் நிலைதனை எடுத்தார்
மொழியூட்டி படைக்கவென கிடைத்தாரே வரமாக உபாத்தியாயர் மவுனகுரு
களைப்பின்றி களிப்போடு கொடுப்பதிலே தேவலோக கற்பகத்தரு
பழுதில்லா மானிடரை உண்டாக்கிக் கொண்டாடும் உன்னதங்கள் ஆசிரியர் உரு
கிளறி மூளையை உழுது , புலமையை புகட்டியவர் அறிவுயிரின் கரு
அறிவுக்களஞ்சியங்கள் ஆசான்களை வாழ்நாளும் போற்றிடுவோம்
குறிப்பாக ஆயுளுக்கும் மதிப்புக்குரியவர்கள், அவர் புகழை ஏற்றிடுவோம்
ஆசிரியரின் உன்னதமான பணியதனை மனமார வாழ்த்திடுவோம்
பேசி அவர் பெருமைதனை புனிதர்களை பூசித்தே வாழ்ந்திடுவோம்.
நன்றி
ஜெயம்
20-07-2022