வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 613

மனமே மனமே

உருவமற்ற ஒன்றாக  எங்கோ இருந்து ஆட்டிப்படைத்திடும் மனமே
நீ எண்ணிய எண்ணமே வாழ்கையுமாகி  மண்ணோடு கழியுது தினமே
விழிப்பிலே நினைவுகள் உறக்கத்தில் கனவுகள் எல்லாமும் இதனது செயற்பாடே
சோகங்கள் வாழ்க்கையில் கூடுவதும் சந்தோசம் அறிமுகமாவதும் இதனூடே

மனம் தூய்மையும் நேர்மையும் ஒழுக்கமும் கொண்டால் ஆலயம் என்பதும் எதற்கு
போட்டி பொறாமை வஞ்சகம் கொண்டால் நோய் பிடித்திடும் அதற்கு
கல்லாகவிருந்து கல்லாது எதையும் ஆட்டிவித்து ஆடவும் வைக்கும்
நல்லதை நினைத்து நல்லதைச் செய்து நிலைதனை மாற்றியும் மெய்க்கும்

அந்த மலையிலும் உயரமான இந்த சமுத்திரத்திலும் ஆழமான மனம் அதிசயமே
பாசமென்றும் வேடமதும் போட்டிடும் மோசம் செய்தும் கக்கிவிடும் விசமே
இருப்பதோ ஒரு மனம் அதனுடன் நடத்தும் போராட்டம் ஓய்வதில்லை
ஆயுள்வரைக்கும் ஆட்டிப்படைக்கும் இந்த மனமே ஆண்டுவிடும் வாழ்க்கையின் எல்லை.

ஜெயம்
13-07-2022