Kavi 612
மீளெழும் காலம்
ஏக்கங்களோடு புலம்பெயர்ந்த கூட்டம்
தாக்கங்களை உள்ளத்துள்ளே பூட்டும்
கிடைத்ததன்றோ புதிதாக அகதியெனும் பட்டம்
அடைந்துகொண்டு உலவிவரும் புதுப்பூமி வட்டம்
அழகிய வாழ்வு வெள்ளையரால் வந்தது
பழகிய மனிதமும் நிம்மதி தந்தது
ஏதிலிகள் தானெனவே காலாகாலமும் இருந்திடலாமா
பாதியிலே உணர்ந்ததை மீதியதை திருத்திடலாமா
பரதேசிகளா தொடர்ந்தும் இப்படி இருப்பதோ
பிறதேசத்தில் இந்நிலை தொடர்வது சிறப்பதோ
மீளெழும் காலமிது தாழ்வு மனப்பான்மையகற்றி
பாழாய்போன நினைவுகளை மனதைவிட்டு விரட்டி
கடக்கவேண்டிய இலக்குகள் குவிந்துமே கிடக்கு
முடங்கியே கிடந்துவிட்டால் விடியாது கிழக்கு
ஏதிலியாய் ஆயுளுக்கும் இருப்பதிலென்ன பெருமை
பாதியில் படித்துக்கொண்டு திருந்துவதே அருமை
Jeyam
22-06-2022