போட்டதே முளைக்கின்றது
மீள முடியாத நிலையில் இலங்கை
ஆளமுடியாதவரால் அடைய முடியாது இலக்கை
கடன்வாங்கி செய்துகொண்ட இனவொழிப்பு யுத்தம்
உடன்பட்டுக் கொண்டோரும் போடுகின்றாரின்று சத்தம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
கொன்றுகுவித்து மகிழ்ந்தோரும் அடைந்தார்களந்த நிலையும்
தற்சார்பு கொள்கையினைப் புறந்தள்ளியவர் அன்று
உற்பத்தியை உதறியதால் அனுபவிக்கின்றார் இன்று
உண்மையை உணரவே வந்தது காலம்
வன்மத்தைப் போக்கினால் ஒற்றுமை மூழும்
பிரிவினையைக் காட்டியதால் நாடேயின்று குட்டிச்சுவர்
புரிந்துகொண்டால் கோடிநன்மை
புரிந்துகொள்வோர் யார்தானெவர்
ஜெயம்
20-06-2022