சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

பாமுகம்

அடுத்த தலைமுறையை விருத்தியாக்கும் நோக்கம்
எடுத்த கொள்கையில் இல்லையே தேக்கம்
வருவார்கள் போவார்கள் கொள்கையிலில்லை தாக்கம்
உருவாக்கிவிடுவதிலே விட்டுப்போகவில்லை கொண்ட ஊக்கம்

அதுதான் இலண்டன் தமிழ் வானொலி
புதுமைதனை தாங்கியின்று பாமுகமாம் காணொலி
சிறுவர் முதற்கொண்டு பல்விழுந்த பாட்டன்வரை
அறிவுலகம் காட்டிவிட மொழிவளத்தை கொண்டதிரை

வெள்ளிவிழாக் காணும் பாமுகத்தைக் கண்டு
சொல்லிப்பல நன்றிகளை வாழ்த்துகின்றேன் இன்று
முகவரியை புகழ்சேர வைத்ததிந்த பாமுகமே
அகவரியை பொறிக்கின்றேன் துதிபாடி  அதுதகுமே

அந்தக்கால நினைவுகளை இரைமீட்டிப் பார்க்கின்றேன்
சிந்திவிடும் சந்தோசத்தை என்தேசம் சேர்க்கின்றேன்
ஆயிரமாயிரமாய் படைக்கவைத்த எங்கள் பாமுகமே
தாயினும் மேலாகப் போற்றிவிடும்
என்னகமே.

ஜெயம்
11-06-2022