பழமை
நுழைந்தே புதுமைகள் உலகுடன் பழகின
பழைமை பண்புகள் மெல்லவே விலகின
பழையவை மறைந்தன
புதியவை தோன்றின
கிளைவிட்ட நவீனத்தில் மகிழ்ச்சியா ஊன்றின
அந்தக்காலம்போல இனியும் திரும்ப வருமா
இந்தக்காலம் அதைப்போல் இனிமை தருமா
அன்றோ அமைதியாய் வாழ்வும் வாழப்பட்டது
இன்றோ அவதியால் வாழ்வும் சூழப்பட்டது
மூத்தோர்கள் தந்த பழமையெனும் பொக்கிஷம்
காத்ததை வைப்போமே எங்கள் கைவசம்
தொன்மைக் காலத்தில் எல்லாமும் இயற்கை
உண்மை , இன்றைய வாழ்க்கையுங்கூட செயற்கை.
ஜெயம்
06/06/2022