சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

அத்திவாரம்

எந்தன் வாழ்க்கையை தாங்கிவிடும் அத்திவாரம்
சொந்தமாகிட எனக்கெனவே வடிவெடுத்த அவதாரம்
தந்துகொள்ளவே இன்னொரு தாயான தாரம்
இந்த உயர்நிலை வாழ்க்கையின் ஆதாரம்

இரும்பாயிருந்தவன் கரும்பாய் மாறிய அதிசயம்
இதுவரையில் புரியவில்லை அந்த இரகசியம்
அறிந்தேன் அருகினில் சுகங்களின் பக்கமே
குறிப்பாய் சொல்லப்போனால் மண்ணில்தான் சொர்க்கமே

எனக்காக யோசிக்க வந்ததோர் துணை
கணவனானாலும் தன் முதற் குழந்தையாக்கினாலெனை
உன்னோடு நானென உயிரையும் கரைக்கும்
அன்பைப் பகிர்கின்றாளே போதுமெனும் வரைக்கும்

தன் சந்தோசம் பதியின் சந்தோசமென
ஜென்மத்திற்கும் தருவேன் வற்றாது நேசமென
விழும் விம்பத்தையும் சேர்ந்தே சுமப்பவள்
எழுகின்ற வாழ்க்கையின் மூலமாய் அமைபவள்

ஜெயம்
03-07-2024