கவி 605
உழைப்பு
உழைப்பு என்பது மொத்தத்தில் சிறப்பு
உழைப்பு அதில் காட்டக்கூடாது வெறுப்பு
உழைப்பு உயர்வாழ்க்கையின் வாயிலின் திறப்பு
உழைப்பால் வந்திடும் சமுதாயப் பொறுப்பு
உழைப்பில்லா பிறப்பு மூச்சிருந்தும் பிணம்
உழைப்பைத் தவிர்ப்பவர் சோம்பலின் இனம்
உழைப்போரே மேலோர் வாய்ப்புகள் கைகுலுக்கும்
உழையாது உட்காந்தோரை காலமும் எள்ளிநகைக்கும்
உழையாது கழிப்போர்க்கு என்றுமேயில்லை மன்னிப்பு
உழைப்பொன்றாலே வாழ்க்கையில் கிடைக்கும் பூரிப்பு
உழைப்பால் உண்டாகும் ஆயுளுக்கும் சுறுசுறுப்பு
உழைப்பு இதுதானென கற்றுக்கொடுக்குதே எறும்பு
உழைப்பிற்கு உறவாகும் உலகத்துப் பரப்பு
உழைப்பை நோக்கியே உள்ளத்தைத் திருப்பு
உழைப்பால் வாழ்க்கையில் வருமொரு பிடிப்பு
உழைப்பாலே உண்டாகும் பற்பல படைப்பு
ஜெயம்
01/05/2022