கவி 604
வேண்டும் வலிமை
குழந்தைகள் எல்லாம் செல்வங்கள் ஆகட்டும்
வளர்கின்ற போதே நம்பிக்கை பூக்கட்டும்
கூர்மையாகிப் புலன்கள் சிறப்பும் அடையட்டும்
ஆர்ப்பாட்டக் குழந்தையும் பன்மடங்காய்ப் படைக்கட்டும்
பிறந்த மழலையெல்லாம் சிறப்பின் வடிவம்தான்
சிறப்பான தேசத்தைக் கட்டும் ஆரோக்கியத்தூண்
ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உற்சாகத்தை விதைப்போம்
ஒவ்வாதெனும் எண்ணங்களை வேரோடு சிதைப்போம்
வலிமையை உண்டாக்குவது சவாலான விடயம்
கலைந்திட இறுக்கமும் நுழைந்திடும் விடையும்
குறைகளைக் காண்போர் குறைபாடு உள்ளோர்
அறிவினைத் திறப்பவர் சுமையாக நில்லார்
சித்தமது துணிந்திட்டால் அதுவே போதும்
புத்தியதில் விலகும் பயத்தின் பிடிவாதம்
அறிவின் அடிப்படையிலான பூலோக வாழ்வு
இறுக்கும் புலனிலும் மதியதன் நீள்வு
அவப்பெயரை பெயர்த்து எடுப்பதே வலிமை
அவமான நினைப்பை தூக்கியெறிவதே வலிமை
சமூகத்திற்கென்று சிலபல கடமைகள் உண்டு
சமத்துவத்தை சகலருடனும் பேணிடல் நன்று
ஜெயம்
27-04-2022