கவி 705
உலகின் நிலைமாற என்னென்ன கொண்டுவருகின்றாய்
பூமியில் சந்தோசம் நிகழ்ந்திட வேண்டும்
சாமியின் வீடது சுகம்பெற வேண்டும்
அழகிய வாழ்க்கையதை கண்மூடியே வாழ்ந்துவிட்டோம்
அழுக்கான காரியத்தால் படுகுழியில் வீழ்ந்துவிட்டோம்
விலைமாற்றங்கள் பொருட்களின் விலைகளில் நிகழ்கின்றது
நிலைமாற்றங்கள் வாழ்க்கையின் நிலைகளில் நிகழ்கின்றது
போன ஆண்டு அறியாமைக்குள் சிறைப்பட்டிருக்கலாம்
நானாவென வியக்கலாம் நீயேதான் விடுபடலாம்
நேற்றைய நாள் விலகியே நகர்ந்துவிட்டது
இன்றைய நாள் பூலோகத்தில் பூத்திருகின்றது
நிறம் மாறிய மாந்தருக்கோர் வேண்டுகோள்
புறம்பேசி கழிப்பதனால் சிதைந்திடாதோ நாள்
உலகத்தை திருத்திட ஒருவனால் முடியாது
கலகமேயில்லாது சிலர் வானம் விடியாது
உன் மனதின் மாறுதலே தேவை
கண் திறப்பின் மற்றவரும் கண்டடைவார்.
ஜெயம்
3-01 24