சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

26-04-2022

இனிவரும் நாளெல்லாம் உன் நாளே

முடியவில்லை உன்னாலென வருந்தலாமோ இனியும் 

விடியும் ஒருநாள் கனியாததெல்லாம் கனியும் 

பிடித்திருந்து ஆட்டிவைத்த ஏழரைச் சனியும் 

முடித்து வீடுமாற அகன்றுவிடும் பிணியும் 

கெட்டகாலமும்  மெல்ல முடிவைத் தழுவிவிடும் 

பட்ட துயரங்கள் மொத்தமாகவே விலகிவிடும் 

கிட்டவாவென ஒட்ட வாழ்க்கையும் அழைத்துவிடும் 

தொட்ட இடமெலாம் பொன்னாக விளைந்துவிடும்

அலக்கழித்த காலமெலாம் அகன்றுவிடும் வேளை 

குலைகுலையாய்  மகிழ்ச்சியதும் நிறைத்துவிடும் நாளை

முளைத்துவிடும் பூக்களாலே வாசம்பெறும் சோலை 

விளைந்துவிடும்  புன்னகையால் விடிந்துவிடும் காலை

ஜெயம்

20-04-2022