சசிச
நீரிழிவு
உடலுழைப்பு அற்றோருக்கு ஒரு எச்சரிக்கை
உழைக்காமல் உண்போர்கள் இதனால் முற்றுகை
விளையாட்டை நிந்தித்தோர்க்கு கணையத்தின் தண்டனை
அமிர்தத்தை உண்டாலும் விசமாகும் இழிநிலை
வியர்வைதனை சிந்துவோரை சீண்டியும் பார்க்காது
இயங்கிவிடின் உறுப்புக்களும்
இழிவுவந்து சேராது
இரத்தோட்டம் நரம்புகளில் சீர்குலைந்து போகாது
குளுக்கோசின் முக்திநிலை தேகத்தை உருக்காது
பசித்தழும் செல்களுக்கு சுரப்பு உதவவில்லை
புசித்துவிட நினைத்தாலும் அதற்கும் எல்லை
சிறுநீரில் குடிபுகுந்து சீனியின் ஆட்டம்
சுருக்கென்று ஓரிரவில் விளையாட்டைக் காட்டும்
இரையினை உமிழ்நீரில் கலந்துமே உண்டு
இரைப்பைக்கு வேலையை கொடுத்திட்டால் நன்று
சிறுகுடல் பெருங்குடல் நட்பினைக் கொண்டு
பிறவிக்கு செய்வோமே நலத்திற்காய் தொண்டு
ஜெயம்
12-11-23