வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 669

ஒளியின்றி ஒளிர்வெங்கு

மனமுன்டானால் வழியொன்று அங்கு உண்டு
குணம் நன்றானால் பிரிவினைதான் என்று
இருளை அகற்றிவிடும் ஒளியின்றி ஓளிர்வெங்கு
பொருளை உணர்ந்திடின் பிறந்நிடும் விடையங்கு

கிழக்கிலே தோன்றும் ஆதவனால் ஒளி
விளக்குகள் தருமே இரவுகளில் ஒளி
நிறைவான அன்பு உள்ளத்தின் ஒளி
இறைவனின் அருளே வாழ்க்கைக்கு ஒளி

இருட்டிற்குள் இருந்துவிட்டால் இருளேதான் உலகம்
கருமையின் வண்ணங்களே எண்ணங்களோடு பழகும்
முழிக்காது விட்டால் இருண்ட விழிகளே
ஓளியின்றிக் கிடக்கும் கடக்கும் வழிகளே

ஜெயம்
08-11-2023