சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

ச. சி.  ச.

குழல் ஓசை

அது குரலா இல்லை குழல் ஓசையா
புது வடிவில் மண்ணில் நுழைந்த பாஷையா
உள்ளம் உவகை தாங்காது உருகிக் கரைகிறது
கள்ளம் அறியாத உள்ளம் என்னத்தை உரைக்கின்றது

என்னவென்று செல்வேன் சிசுவின் அசைவுகள் ஆனந்தமே
கண்ணெதிரே ஜெக வாழ்வு சுகம் சிந்துமே
இன்னும் இன்னுமென்று மனம் ஒளியையும் முந்துமே
பின்னரும் கூட கனவிலும் வந்தது குந்துமே

குழந்தையின் செயல்களில் இன்பங்கள் கட்டுக்கடங்காமல் பீறிடும்
இழந்தவை எதுவுமில்லை என உணர்வது கூறிடும்
சின்ன உலகத்திற்குள் ஒன்றல்ல இரண்டல்ல அற்புதங்கள்
கன்னக் குழி வரையும் அழகான ஓவியங்கள்

துன்பங்களை கரைத்து விடும் எழில் சிரிப்பு
இன்பங்களை தந்துவிட கவலைகள் கட்டுக்கடங்காமல் மரிப்பு
இறைவனின் அருகாமையில் இருப்பது போன்றதெரு நிகழ்வு
தரை தீர்க்கும் வாழ்வினில் குழவியினால் மகிழ்வு

ஜெயம்