கவி 661
தொலையாத வாழ்க்கை
துயரத்தின் செவியைப்பிடித்து வெளியேவிட்டு கதவைப்பூட்டி
துரத்திப்பிடித்து மகழ்ச்சியை வாழ்க்கையுடன் சேர்துக் கட்டி
சோதனைக்குள் சிக்காது அமைதிவேலி போட்டு
போராட்டத்தை அடக்கிவிட்டு வாழ்க்கை புன்னகை புரிகின்றது
சினத்தால் சிந்தை சிதைந்து உருக்குலையவில்லை
புத்தி செத்து அறியாமை சிறைவைக்கவில்லை
எண்ணம் உயிரோடு நல்லதை சுவாசித்தபடி
இடையூறுகளை இடைநிறுத்தி வாழ்க்கை நிம்மதியை சுமந்தபடி
பணத்தால் இன்பமென்றில்லை பசியை போக்கியது
மனம் சஞ்சலத்தை அகற்றி ஆண்டவனாகியது
உண்டாகும் ஒவ்வொரு கணங்களுமே பரிசுகளை பகிர்ந்ததன
விழுகின்ற நிழல்கூட பரம திருப்தியுடனே நகர்ந்தது
உரிமைகொண்ட ஆயுளும் பாராட்டி மகிழ்ந்து கொள்ளும்
தேகம்கொண்ட சீவனும் காலம் தந்து உறவுகொள்ளும்
வாசல் தேடிவந்தே நலமும் வரவாகிவிடும்
அர்த்தம் சொல்லும் வாழ்க்கை வரமாகிவிடும்
ஜெயம்
12-07-2023