வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 669

சித்திரை மகளே வருக இத்தரைக்கு மகிழ்வைத் தருக

சித்திரை மகளே இனிதாக வருக
சிந்தியே வரத்தினை விடியலைத் தருக
இத்தரை மீதினில் வளங்களும் பெருக
தந்திடுவாயே வாழ்க்கையில் மகிழ்ச்சியை நெடுக

பசி பட்டினி பாரினைச் சூழுதே
புசிக்க உணவின்றி பஞ்சமும் ஆளுதே
வசிக்கவே முடியாத காலமும் நீளுதே
கசிந்துளம் உருகாயோ வறியவர் வாழவே

பலரது இரவுகள் இன்னும் விடியவில்லை
உலகத்து எல்லைகளில் துயரங்கள் முடியவில்லை
கலவரமான நிலவரம் ஏனெனெப் புரியவில்லை
மலருமாண்டே தீராயோ பூமிப்பந்தின் தொல்லை

சூது நிறைந்த பூலோகமாய் கண்முன்னே
தீதுசெய்வோர் தமைமறைத்து அதன் பின்னே
யாதுமிங்கு யாவர்க்குமில்லை நீதியின்றி மண்ணே
போதுமிது நற்செயலை மொழிவாயோ சித்திரைப்பெண்ணே

ஜெயம்
13-04-2022