சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

விருப்புத் தலைப்பு

எல்லாம் வல்லவர்

கண்ணுக்குத் தெரியாமல் அரூபியாய் இருந்து
மண்ணின் மாந்தரை நன்றாகப் புரிந்து
யாதுமாகி இருப்பவர்
பரம்பொருள் ஒருவரே
போதுமான வாழ்வை கொடுப்பதும் அவரே

ஓய்வு இல்லாமல் கடமை புரிவார்
தாய்மையின் உருவென பக்தர்க்குத் தெரிவார்
இயற்கை எங்கினும் வளங்களின் ஆட்சி
நிஜத்தில் அவயெலாம் இறைவனின் மாட்சி

எவராலும் இங்கு எதுவும் ஆகாது
அவரால் அன்றி துன்பம் போகாது
அழ வைத்தும் அழகு பார்ப்பார்
எழ வைத்தே இன்னல் தீர்ப்பார்

மனித அறிவிற்கு அப்பாற்பட்டவர் படைத்தவர்
பிணிதனை அகற்றிடும் மருந்தாக கிடைத்தவர்
கடவுள் ஒருபோதும் எவரையும் கைவிடுவதில்லை
முடக்கம் வந்திடினும் மாறிடும் எல்லை.

ஜெயம்
12-06-2023