சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

அதனிலும் அரிது

இல்லாதோர்க்கு உதவும் மனங்கள் பெரிது

சொல்லாது செய்வதென்பது அதனிலும் அரிது

உள்ளோரிடத்தில் எல்லாம் இருந்தாலே பகுத்தறிவு 

தள்ளாடிப்போகாதே மனிதன் மனதில் பரிவு 

கிள்ளிக்கொடுப்பதனால் இருப்பொன்றும் குறைந்தே போகாது 

தள்ளியேயிருந்து தவிப்போரை பார்ப்பதும் தீது

சொல்லிக்கொண்டே செய்யாதிருந்தால் அது ஆகாது 

முள்ளையகற்றிவிட்டால் பாதத்தில் வலிதான் ஏது

வாழவழியின்றி வருந்துவோர் தரனியில் கோடி

காலாகாலமும் பட்டினிப் போரினால் வாடி 

கேளு மானிடா தேடாமலிருப்பவர் தேடி

வாழவொரு சந்தர்பமிது வாழ்வோமேயிங்கு கூடி

மனமுவவந்து கொடுப்பவரவர் கடவுளிற்கு நிகர்

குணத்திற்குள் சுயநலமிருந்தால் அதை தகர்

பணிகள்செய்து கிடக்குமென்றும் தன்னலமற்ற நகர் 

கனிவு அதனிலுமரிது நற்செயலால் நுகர்

ஜெயம்

10-04-2022