சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராசா

வசந்தத்தில் ஓர் நாள்

புதுப்புது பூக்களின் அனுதின பிரசவங்கள்
மதுவுண்டு வண்டதோ சுக சுரங்கள்
வசந்தத்திலோர் நாள் சோலையும் சிரித்தது
வசப்படுத்திய மனமதும் மகிழ்ச்சியால் விரிந்தது

கவிபாட அமர்ந்தேன் வார்த்தைகள் கொப்பளித்தன
தெவிட்டாது செந்தமிழும் சொற்களை அன்பளித்தன
காலங்களில் வசந்தம் சுகமான சுகந்தம்
கோலங்களின் வர்ணங்களால் கற்பனையும் விரியும்

அளவான குளிரால் இதயமோ இதமானது
நிலம் வருடி வெப்பமோ மிதமானது
அந்நாளோ பொன்நாளாய் கவியனெனை ஈர்த்தது
இந்நாளே நெஞ்சமதில் புல்லாங்குழல் ஊதியது

03-01-2024